top of page
137. இந்தக் குழந்தையை
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்
கொள்ளும், கர்த்தாவே!
உன்றன் பிரதிஷ்டையால் உமக்குப்
பிள்ளையாக்கிய
சேனை வீரனாய் வந்து
ஈனச் சாத்தானை வென்று,
ஞானப் புதல்வனாய்
எந்நாளும் உமைத் துதிக்க.
பொய் வஞ்சம் வன்மை பகை
வொல்லாக் குணங்கள் நீக்கி
மெய் அன்பு சத்தியம் நேசம்
விளங்க என்றும் சீராக்கி.
இரட்சிப்பின் சத்தியத்தை
எத்திசையிலும் கூறும்
சுத்த நல் வீரனாக இத்
தரையில் விளங்க.
சஞ்சலம் துயர் துக்கம்
மிஞ்சும் தருணத்திலும்,
நெஞ்சில் நின் பஞ்ச காயம்
தஞ்சமென்றுன்னைச் சார.
bottom of page