top of page

139. தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ

எம் ஜீவனிலும் அதே

இம்மட்டும் கர்த்தாவே

இன்னும் தேவை கிருபை தாருமே.


தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை

வாழ்நாளெல்லாம் அது போதுமே

சுகமுடன் தம் பெலமுடன்

சேவை செய்ய கிருபை தாருமே

- தம் கிருபை பெரிதல்லோ


தினம் அதிகாலையில் தேடும் புதுகிருபை

மனம் தளர்ந்த நேரத்திலும்

பெலவீன சரீரத்திலும்

போதுமே உம் கிருபை தாருமே

- தம் கிருபை பெரிதல்லோ


கர்த்தர் வெளிப்படும் நாள்

அளித்திடும் கிருபை

காத்திருந்தே அடைந்திடவே

இயேசுவே உம்மை சந்திக்கவே

இரக்கமாய் கிருபை தாருமே

- தம் கிருபை பெரிதல்லோ

bottom of page