top of page
14. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
மகிழ்வோம் மகிழ்வோம்
தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ! ஆ! ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
சின்னஞ் சிறு வயதில்
என்னைக் கண்டழைத்தார்
தூரம் போயினும் கண்டுக் கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
'ஜீவன் பெற்றுக் கொள்' என்றுரைத்தார்
- ஆ! ஆ! ஆனந்தமே பரமானந்தமே
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
- ஆ! ஆ! ஆனந்தமே பரமானந்தமே
அவர் வரும் நாளினில்
என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
- ஆ! ஆ! ஆனந்தமே பரமானந்தமே
bottom of page