top of page
141. அற்புதமானவர் என் இயேசு
அற்புதமானவர் - என் இயேசு
அழகில் சிறந்தவர் - என் நேசர்
வானம் பூமியைப் படைத்தவர்
வாக்கு மாறாத வல்லவர்
பொங்கின கடலையும் - என் தேவன்
அமைதியாக்கினார் - வல்லவர்
முடவரும் நடந்திட குருடர்
பார்வையடைந்தனர்
- அற்புதமானவர் என் இயேசு
ஐந்தப்பம் இரண்டு மீனை - இயேசு
ஐயாயிரம் பேர்கட்கு - அளித்தார்
செங்கடலையும் பிளந்தவர் மாராவின்
தண்ணீரை மாற்றினார்
- அற்புதமானவர் என் இயேசு
ஆயிரம் நாவுகலால் - அன்பரை
போற்றினால் போதுமோ - இயேசுவின்
கிருபை கூறி புகழுவோம் ஜீவிய
நாளெல்லாம் போற்றுவோம்
- அற்புதமானவர் என் இயேசு
bottom of page