143. மா மேன்மையான நாடோண்றூண்டே

மா மேன்மையான நாடோண்றூண்டே

விசுவாசக்கண் காணுது அதை;

நமக்கொரு ஸ்தலத்தை அங்கே 

நம் பிதா ஆயத்தம் செய்கிறார் 


பேரின்பம் அடைவோம்;

மோட்ச வீட்டில் நாம் சேரும்போது 

பேர் இன்பம் அடைவோம், 

மோட்ச வீட்டில் நாம் சேரும்போது 


கண்ணாடிக் கடலண்டையிலே 

புதுப்பாட்டை நாம் பாடிடுவோம் 

களிப்புள்ள நம் ஆவியிலே 

துக்கம் ஏக்கமோ நுழையாது 


அழகுள்ள நம் ஆண்டவரின் 

அன்பின் அறிய ஈவுக்காக 

ஆயுள் நாளை இன்ப் மாக்கின 

அவர்க்கே புகழ் ஏற்றிடுவோம்