top of page

144. நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்

நல்லவர் இயேசு நல்கிய எல்லா

நன்மைகளை நினைத்தே


செங்கடல் தனை நடுவாய் பிரித்த

எங்கள் தேவனின் கரமே

தாங்கியே இந்நாள் வரையும்

தயவாய் மா தயவாய் – ஆ (2)


மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய 

மா பெருங் கிருபை

மா நிலத்தோர்க் கீந்தாரேசு 

சுவிசேஷ ஒளியால் – ஆ (2)


அழைக்கப்பட்டோரே நீர் 

 உன்னத அழைப்பினை

அறிந்தே வந்திடுவீர் 

அளவில்லாத் திரு ஆக்கமிதனை 

அவனியோர் வாக்களிப்பீர் – ஆ (2)

bottom of page