top of page

146. நான் வெகு தூரம் அலைந்தேன்

நான் வெகு தூரம் அலைந்தேன் 

இப்போ நான் வாறேன் 

நீள் காலம் பாவ வழி சென்றேன் 

கா்த்தா, நான் வாறேன்


நான் வாறேன், நான் வாறேன், 

அலையேன் என்றும், 

உம் அன்பின்  கரம் திறவும்

கர்த்தா, நான் வாறேன்


நான் வீணாய் காலம் கழித்தேன் 

இப்போது நான் வாறேன்

மனஸ்தாப கண்ணீருடன் 

கர்த்தா, நான் வாறேன்


எனக்காய் மாண்டார் என் இயேசு, 

இப்போ நான் வாறேன்

இதுவே, என் நல்நம்பிக்கை 

கர்த்தா, நான் வாறேன்


என் தேவை அவர் ரத்தம் தான் 

இப்போது நான் வாறேன் 

கழுவும் என்னை சுத்தமாய் 

கர்த்தா, நான் வாறேன்

bottom of page