15. முசிப்பாறும் இடம் உண்டு

முசிப்பாறும் இடம் உண்டு 

தேவனின் மார்பருகில் 

பாவம் துன்புறுத்தா இடம், 

தேவனின் மார்பருகில் 


ஏ! ஏசு ரட்சகா! நீர் 

பரம் நின்று வந்தீர். 

உம் முன்னே காத்து நிற்கும் 

தாசர் எம்மைக் காரும் 


ஆறுதல் அடையும் இடம், 

தேவனின் மார்பருகில் 

மீட்பரை சந்திக்கும் இடம், 

தேவனின் மார்பருகே 


ஜெயம் என்றும் பெறும் இடம், 

தேவனின் மார்பருகே 

சமாதானம் இன்பம் அங்கே, 

தேவனின் மார்பருகே