150. ஓ! இயேசு உமதன்பு

ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது

ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2)


அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது

ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது

அன்றாடம் காலை மாலைகளிலும்

துதிக்க உயர்ந்தது (2)


சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்

துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்

பங்கமில்லாமல் பதிலளிப்பேன்

என்றதால் பாடுகிறேன் (2)