top of page

154. ஏசுவையே துதிசெய் நீ மனமே

ஏசுவையே துதிசெய், நீ மனமே 

ஏசுவையே துதிசெய் - கிறிஸ்தே சுவையே 


மாசணுகாத பராபர வஸ்து 

நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

- ஏசுவையே துதிசெய்


அந்தரவான் தரையுந் தரு தந்தன் 

சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் 

- ஏசுவையே துதிசெய்


எண்ணின காரியம் யாவு முகிக்க 

மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

- ஏசுவையே துதிசெய்

bottom of page