top of page
155. அமர்ந்த மெல்லிய சத்தம்
அமர்ந்த மெல்லிய சத்தம்
அன்பான உன் காதில் தொனிக்கின்றதா
அதையே தள்ளிடாதே
அதையேன்றும் தள்ளிடாதே
அதை நீ தள்ளிடாதே
அலட்சியம் செய்திடாதே
- அமர்ந்த மெல்லிய சத்தம்
உன் அக்கிரமம் மன்னிக்கப்படும்
உன்னதமானவர் மறைவில் இருப்பாய்
நீர்பாய்ச்சலான தோட்டத்தைப் போல
வாழ்நாள் எல்லாம் வாழ்ந்திடுவாய்
- அமர்ந்த மெல்லிய சத்தம்
உன் பாவங்கள் மூடப்டுமே
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவாய்
வற்றிடாத நீர் ஊற்றினாப் போல
வாழ்நாளெல்லாம் வாழ்ந்திடுவாய்
- அமர்ந்த மெல்லிய சத்தம்
உன் பாவத்தை எண்ண மாட்டாரே
உன்னை காக்கிறவர் என்றுமே உறங்கார்
நீர்க்காலில் நாட்டிய மரத்தைப்போல
நீடித்த நாட்கள் வாழ்ந்திடுவாய்
- அமர்ந்த மெல்லிய சத்தம்
bottom of page