158. சிகரங்கள் அடுக்கடுக்காய்

சிகரங்கள் அடுக்கடுக்காய்ச் 

சீருடன் அமைத்த தேவன் 

சிதைவுற்ற என் வாழ்வினை 

அழகாக மாற்றுகிறார் 

தவந்திடும் மேகங்களால்

மலைகள் மேல் மழை பொழியும் 

இயேசுவின் ஆவியினால் 

என் உள்ளம் களிப்பெய்திடும்


ஆஹா இன்பம் இன்பம் 

இயேசு தந்த இன்பம் 

இன்றேபெற்ற இன்பம் 

என்றும் மாறா இன்பம் 


பட்சிகள் விலங்குகளும் 

இன்பமாய் வாழ்வதை பார்

பட்சமாய் இயேசு என்னை 

நிதமூம் வாழ வைப்பார் 

பாறையில் எழுந்த மரம் 

பயன்தரும் அழகினைப்பார்

பாவி என் வாழ்க்கையிலும் 

ஆவியின் கனி தருவார்