top of page
161. மேகமீதில் இயேசு ராஜன் வேகம்
மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே!
ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க
அவரே வாறாரே, மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாறாரே
மீண்டவரோ மேலோகம் செல்ல
மேதினியை விடுவார்
- மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
கிளம்பியே எழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே
- மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லா பலனையே
கூவியே கொடுத்திடுவார்
- மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
ஆயிரமாயிரம் அவரது வசனங்கள்
அதை அறிவிக்கின்றதே
- மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
bottom of page