top of page

162. ஆணிகள் பாய்ந்த

ஆணிகள் பாய்ந்த 

கரங்களை விரித்தே 

ஆவலாய் இயெசுன்னை 

அழைக்கிறாரே 


பார் ! திருமேனி வாரடியேற்றவர் 

பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே 

பாவமும், சாபமும், சுமந்தாரே 

உனக்காய் பயமின்றி வந்திடுவாய்

- ஆணிகள் பாய்ந்த 


மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் 

நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே 

உணர்ந்திதையுடனே உன்னதனண்டை 

சரண்புகுவாய் இத்தருணம்

- ஆணிகள் பாய்ந்த 


பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப் 

பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே 

மறுரூப நாளின் அச்சாரமதுவே 

மகிமையும் அடைந்திடுவாய்

- ஆணிகள் பாய்ந்த 

bottom of page