top of page
164. ஏசுவே என்னை
ஏசுவே என்னை படைக்கின்றேன்
ஏற்று என்றும் நடத்திடுமே
என் பாவம் கழுவி சுத்திகரித்தீர்
நான் நீதிமானாய் ஆனேன்
பாவமெல்லாம் பஞ்சைப் போல் ஆகவே
வெண்மையாக மாற்றித் தந்தவரே.
கல்லான என் நெஞ்சை நீர் உடைத்தீர்
சதையான இதயம் பெற்றேன்
அழக்கான கந்தை நீர் மாற்றினிர்
நீதியின் வஸ்திரம் உடுத்துவித்தீர்.
கர்த்தரின் ஊழியம் நிறைவேற்றிட
என்னையும் அர்ப்பணித்தேன்
பெலன் தந்து, என்னையும் அபிஷேகியும்
காருண்ய நாதரே என் ஏசுவே
bottom of page