166. சீயோனே நீ எழும்பி பிரகாசி
சீயோனே நீ எழும்பி பிரகாசி
சாலேம் ராஜன் இதோ வருகிறாரே
மேகங்களூடனே
கண் யாவும் காண
மகிமைகள் உன்னை
அவர் வந்து சேர்ப்பார்
பகற் காலங்க ளெல்லாம்
அணைத் தணைந்து போய்
இராக் காலங்கள்தான் அடுத்தடுத்தே
சடுதியாய் பூவினில் வந்து கொண்டிருக்க
ஜாதிகள் யாவும் தத்தளிக்குதே.
- சீயோனே நீ எழும்பி பிரகாசி
சேனை பலத்தால் ராஜ்யங்கள் ஆயினும்
தினந் தினமாகத் தகர்ந்திடுதே.
சேனை சக்தியில் ஒன்றுமே இல்லை
ஆவியின் பலத்தால்
ஜெயம் கொள்ள வேண்டும்
- சீயோனே நீ எழும்பி பிரகாசி
முடிவு காலத்தின் முடிவு வருமுன்
முத்தூது எங்கும் முழங்கணுமே
பின்மாரி பெற்று பிரயாசங் கொண்டு
பிரபுக்களையும் பிடித் திழக்கணும்.
- சீயோனே நீ எழும்பி பிரகாசி
திருச்சபையே உன் தீபங்கள் எல்லாம்
சூரிய பிரகாசம் போல் இலங்கிட்ட்டும்
மகிமையாய் வானத்தில் எழும்பிப் வருகையில்
மணவாளனோடு நாம் மறுரூபமாவோம்
- சீயோனே நீ எழும்பி பிரகாசி