top of page
168. நினைக்கும் தேவன் உண்டு
நினைக்கும் தேவன் உண்டு
நித்தமும் நடத்துவார்
அவர் கோலும் தடியுமே
என்னைத் தேற்றி நடத்துமே
- நினைக்கும் தேவன் உண்டு
மரண பாதையிலே
நடந்த வேளையிலே
ஜிவ தேவன் ஜீவன் தந்தார்
பாடி மகிழ்ந்திடுவேன்
- நினைக்கும் தேவன் உண்டு
ஊழிய பாதையிலே
உடைந்த நேரத்திலே
உண்மை தேவன் உயிர்ப்பித்தாரே
உயர்த்திப் போற்றிடுவேன்
- நினைக்கும் தேவன் உண்டு
bottom of page