170. ஆயிரம் நாவுகள் போதா

ஆயிரம் நாவுகள் போதா 

ஆண்டவர் உந்தனை பாட

கணக்கில்லா நன்மைகள் செய்தீர் 

கர்த்தர் உம்மை போற்றிப் பாட 


காலமெல்லாம் உந்தன் அன்பால் 

கரம் பிடித்தென்னை நடத்தி 

காத்த உம் கிருபையை நினைத்தே 

கர்த்தா உம்மைப் போற்றிப் பாட 


அலை மோதியோடும் படகாய் 

அலைந்த என்னை நீர் கண்டீர் 

ஆணிகள் பாய்ந்த உம் கைகள் 

ஆண்டு நடத்துமே தேவா 


வானோடு பூமி ஆழ்கடலும் 

வல்லவா நீரே எனச் சொல்ல 

வல்ல நல் தேவா உம் பாதம் 

வந்தேன் ஏசையா நான் ஏழை