top of page

172. இயேசு ராஜா வருவார்

இயேசு ராஜா வருவார், 

தூதரோடும் வருவார், 

பக்தரை மோட்சத்தில் சேர்த்திடவே 

நான் ஜோதியாய் அவர் முகம் கண்டிடுவேன் 

பின்னும் ஜெயகம்பீரங் கொண்டுள்ளம் பொங்கிடுமே 

- இயேசு ராஜா வருவார்


மணவாளனோடு மணவாட்டி சபை, 

மங்களமாய் கவி சாற்றிடுமே 

அப்போ மாட்சிமையோடு நாம் பாடிடுவோம்

அவர் நேசத்தின் ஆழத்தை ருசித்திடுவோம்

- இயேசு ராஜா வருவார்


முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளை அங்கி தரித்து

கர்த்தர் சமூகத்தில் நின்றிடுவார்

அதில் சேர்ந்திடுவேன் நானும் பாடிடுவேன் 

அன்று பொற்கிரீடம்  தரித்தாடிடுவேன்

- இயேசு ராஜா வருவார்

 

வானத்தில் எக்காளம் தொனித்திடும் சமயத்தில் 

சுத்தர்கள் யாவரும் பறந்திடுவார்

அப்போ அத்தனின் கலியாண விருந்திலே

நாமும் நித்தமும் அவரோடு ஆர்ப்பரிப்போம்

- இயேசு ராஜா வருவார்

bottom of page