top of page

175. நம் இயேசுவின் வருகை

நம் இயேசுவின் வருகை இன்று 

வெகு சமீபமாய்த் தெரிகின்றது 


உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் 

வெகு அவசியமாகின்றது 

ஓ மானிடரே, இதைச் சிந்திப்பீரே, 

இயேசு கிறிஸ்து வருகின்றார் 


பாவத்தில் புரளுவதும் 

மா சாபத்தில் முடியும் அன்று

- உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் 


தேவனைத் தள்ளுபவர் 

மா வேதனை அடைவார் அன்று

- உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் 


அன்பினால் வரும் அழைப்பு 

நல்லதோர் எச்சரிப்பு

- உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் 


தயவாக ஓடியே வா 

கிருபையின் வாசல் உண்டு

- உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் 

bottom of page