top of page
177. மெய் பக்தர் தாசர்
மெய் பக்தர் தாசரே
கொண்டாட கூடுவோம்;
சந்தோஷ கீதம் பாடியே
கர்த்தாவை போற்றுவோம்
மா உன்னத சீயோன்
சோமசுந்தர சீயோன்
மா உன்னத திவ்விய சீயோன்
நாம் நோக்கியே செல்லுகிறோம்
ரட்சண்யக் கூட்டத்தார்,
பேரீவுக்காகவே
மென்மேலும் நன்றி சொல்வார்
பாடாமல் தீராதே
பேரன்பின் வாரியில்
நாம் மூழ்கி அழ்கிறோம்;
பின், மோட்சானந்த வீட்டினில்
ஒன்றாகப் பூரிப்போம்.
விசாரம், துக்கத்தை
விட்டார வாரிப்போம்;
இம்மானுவேலின் தேசத்தை,
நாம் நாடி போகிறோம்
bottom of page