top of page

178. இயேசுவின் நாமம் இனிதான நமாம்

இயேசுவின் நாமம் இனிதான நமாம் 

இணையில்லா நாமம் இன்ப நாமம் - எங்கள் 


பாவத்தை போக்கும், பயமதை நீக்கும்

பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் 

- இயேசுவின் நாமம் இனிதான நமாம் 


வானிலும், பூவிலும் மேலான நாமம் 

வானாதி வானவர் இயேசுவின் நாமம் 

- இயேசுவின் நாமம் இனிதான நமாம் 


நேற்றும், இன்றும், என்றும் மாறிடா நாமம் 

நம்பினோரை என்றும் கைவிடா நமாம் 

- இயேசுவின் நாமம் இனிதான நமாம் 


முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம் 

மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் 

- இயேசுவின் நாமம் இனிதான நமாம் 


சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம் 

சாபப் பிசாசை துரத்திடும் நாமம்

- இயேசுவின் நாமம் இனிதான நமாம் 

bottom of page