top of page

179. பரலோகமே என் சொந்தமே

பரலோகமே என் சொந்தமே 

என்று காண்பேனோ? 

என் இன்ப இயேசுவை 

என்று காண்பேனோ? 


வருத்தம் பசி தாகம் 

மன துயரம் அங்கே இல்லை 

விண் கிரீடம் வாஞ்சிப்பேன் 

விண்ணவர் பாதம் சேர்வேன் 

- பரலோகமே என் சொந்தமே 


சிலுவையில் அறையுண்டேன் 

இனி நானல்ல இயேசுவே 

அவரின் மகிமையே 

எனது லட்சியமே 

- பரலோகமே என் சொந்தமே 


இயேசு என் நம்பிக்கையாம் 

இந்த பூமியும் சொந்தமல்ல 

பரிசுத்த சிந்தையுடன் 

பரமானைப் பின்பற்றுவேன் 

- பரலோகமே என் சொந்தமே 


அழைப்பின் சத்தம் கேட்டு 

நானும் ஆயத்தமாகிடுவேன் 

நாட்களும் நெருங்குதே 

வாஞ்சையும் பெருகுதே 

- பரலோகமே என் சொந்தமே 


பளிங்கு நதியோரம் 

சுத்தர் தாகம் தீர்த்திடுவார் 

தூதர்கள் பாடிட 

தூயனை தரிசிப்பேன்

- பரலோகமே என் சொந்தமே 

bottom of page