top of page

18. வேதநூல் தாரும், வின்வெள்ளி ஜொலிக்க

வேதநூல் தாரும், வின்வெள்ளி ஜொலிக்க 

திரிந்தலைவோர் திடப்படுவார்; 

அச்சுடரையோ புயல் மறைக்காது, 

கேட்டோரை மீட்க ஏசுவே வந்தார்! 


வேதநூல் தாரும், தூதுமொழி வீச 

வாக்குத்தத்தங்கள் கற்பனை அளவும் 

இரவு சென்று விடிந்திடும் வரை, 

உம் சுடர் என்னை சீராய் நடத்தும் 


வேதநூல் தாரும், என்னுள்ளம் நோகையில் 

வேதாளம் என்னை விரட்டுகையில்; 

வார்த்தைகள் தாரும், ஏசு மொழிந்திட்ட 

மீட்பர் என் பக்கம் என்று காட்டிட, 

- வேதநூல் தாரும், தூதுமொழி வீச


வேதநூல் தாரும், நடத்தும் என் நடை, 

பாதாள மோசம் நான் அறியட்டும் 

நிலையாய் நிற்கும் நித்ய தீபமாக, 

நிர்மலன் பாதை நன்கு காட்டட்டும்.

- வேதநூல் தாரும், தூதுமொழி வீச 


வேதநூல் தாரும், சாவு வேலையிலும் 

விசுவாசம் கொள்ள, அங்கலாய்ப்பின்றி 

காலுக்குத் தீபம், பாதைக்கு வெளிச்சம் 

கர்த்தாவின் வீடு போய் செரும்மட்டும்.

- வேதநூல் தாரும், தூதுமொழி வீச

bottom of page