top of page
180. மான்கள் நீரோடை
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே
தஞ்சம் நீர், அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர், என்றும் காப்பீர்!
தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே
- தஞ்சம் நீர், அடைக்கலம் நீர்
ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால்
தினமும் துதித்துப் போற்றிடுவோம்
- தஞ்சம் நீர், அடைக்கலம் நீர்
யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
நிதமும் நினைத்திடுவேன்
- தஞ்சம் நீர், அடைக்கலம் நீர்
bottom of page