181. சத்தம் கேட்டு சித்தம்
சத்தம் கேட்டு, சித்தம் செய்ய அழைக்கிறாரே - இயேசு
சத்தம் கேட்டு, சித்தம் செய்ய அழைக்கிறாரே.
சத்தம் கேட்டு சித்தம் செய்ய, வருந்தி அழைக்கின்றாரே.
காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது - ஆ! ஆ!! ஆ!!
வேகமாய் வரவேண்டுமே
கருத்தாய் கவனமாய் கால்நடையாய்
தாழ்ந்து வரும்படி அழைக்கின்றாரே,
கருத்தாய்க் கவனமாய் கால்நடையாய்
தாழ்ந்து வரும்படி அழைக்கின்றாரே
கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ! ஆ!! ஆ!!
அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே
கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்கு
சொந்த சம்பத்து அல்லவோ?
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெறுவீர்
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெறுவீர்
உலக மாமிச பிடியினின்றும் - ஆ! ஆ!! ஆ!!
பிசாசின் தந்திர வலையினுன்றும்
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம்
சாத்தானை நாமும் முறியடிப்போம்
உப்பைப் போல கரைந்துவிடு
மெழுகைப் போல உருகிவிடு
வெற்றி ஒன்றே தரும் ஆண்டவர்க்கு - ஆ! ஆ!! ஆ!!
வெற்றி ஒன்றே தரும் ஆண்டவர்க்கு
காணிக்கை காணிக்கையே
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே
காணிக்கை காணிக்கையே
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும்