top of page
183. கர்த்தராகிய தேவன்
கர்த்தராகிய தேவன்
விளம்புவதைக் கேட்பேன்
இனிமையான சப்தத்தால்
என்னை அழைக்கிறார்
கர்த்தரின் சத்தம் கேட்டுக்
கற்பனையைக் கைக்கொண்டால்
இகபர நன்மைகள் பெற்று
இன்பமாக வாழ்ந்திடுவாய்
- கர்த்தராகிய தேவன்
வறுமை நீங்கிடவே
வளமாய் வாழ்ந்திடவே
தசமபாகம் நீ கொடுத்தால்
தயாளமாய் வாழ்ந்திடுவாய்
- கர்த்தராகிய தேவன்
யாக்கோபின் சுதந்திரத்தை
எல்லாரும் பெற்றிடவே
ஓய்வுநாளை ஆசரித்தால்
ஓயாத இன்பமுண்டு
- கர்த்தராகிய தேவன்
bottom of page