top of page

184. எனக்காக யாவற்றையும் செய்பவரே

எனக்காக யாவற்றையும் செய்பவரே

எனக்கினி பயமில்லை உலகினிலே

எனக்காக யாவற்றையும் செய்வதினால் - நான்

இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி தொழுதிடுவேன்


பஞ்சத்திலே எலியாவுக்கு அப்பம் கொடுத்தார்

பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார்

பஞ்சம் நீங்கி வரும் வரை அந்த வீட்டில் - என்றும்

பானையிலே எண்ணை மாவும் குறையவில்லை


ஆகாயத்துப் பறவையை கவனித்துப் பார்

அவை விதைப்பதில்லை அவைகள் அறுப்பதில்லை

அவைகளைப் பிழைப் பூட்டும் பரம பிதா - அவர்

நம்மையும் நடத்துவது உண்மையல்லவா


நாளைய தினத்திற்காகக் கவலை வேண்டாம்

நாதன் இயேசு இருக்கிறார் அஞ்ச வேண்டாம்

நாளைய தினத்திற்காகக் கவலைப்படும் - அந்த

நாளுக்கு அதனதன் பாடு போதும்

bottom of page