top of page

185. தோத்திர பாத்திரனே

தோத்திர பாத்திரனே, தேவா,

தோத்திரந் துதியுமக்கே!

நேத்திரம் போல் முழு

ராத்ரியும் காத்தோய்

தோத்திரம் துதியுமக்கே!


சத்துரு பயங்களின்றி – நல்ல

நித்திரை செய்ய எமை

பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே

சுற்றிலுங் கோட்டையானாய் 


விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்

விழிகளை மூடாமல்,

துடி கொள் தாய்போல் படிமிசை எமது

துணை எனக் காத்தவனே


காரிருள் அகன்றிடவே – நல்ல

கதிரொளி திகழ்ந்திடவே,

பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன

பாங்கு சீராக்கி வைத்தாய் 


இன்றைத் தினமிதிலும் – தொழில்

எந்தெந்த வகைகளிலும்

உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்

ஊன்றியே காத்துக் கொள்வாய்

bottom of page