top of page

187. பாதை தெரியாத ஆட்டைப் போல

பாதை தெரியாத ஆட்டைப் போல 

அலைந்தேன் உலகிலே 

நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே.


கதறினேன் நீர் என்னைக் கண்டீர்

பதறினேன் நீர் என்னைக் பார்த்தீர் 

கல்வாரியின் அண்டை வந்தேன் 

பாவம் தீர நான் அழுதேன் 

- நான் பாதை தெரியாத ஆட்டைப் போல 


அழைப்பின் சத்தத்தைக் கேட்டேன் 

ஆவலாய் உம்மண்டை வந்தேன் 

ஐயா நின் கிருபை தாரும் 

அடியேனை இன்று காரும் 

- நான் பாதை தெரியாத ஆட்டைப் போல 


கல்வாரிக் காட்சியைக் கண்டேன் 

கல்லான உள்ளத்தை உடைத்தேன் 

கனிவோடு என்னை நீர் அணைத்தீர் 

காவலனே என்னைக் காத்தீர்

- நான் பாதை தெரியாத ஆட்டைப் போல 

bottom of page