top of page
19. பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர் லோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
ஜீவ விருட்சத்தின் கனி புசித்து,
ஜீவ நதி நீரை என்றும் குடித்து,
ஜீவ க்ரீடமும் சிரசில் சூடி,
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
bottom of page