191. உறக்கம் தெளிவோம்

உறக்கம் தெளிவோம்

உற்சாகம் கொள்வோம்

உலகத்தின் இறுதிவரை

கல்வாரித் தொனிதான்

மழை மாறி பொழியும்

நாள்வரை உழைத்திடுவோம்


கிறிஸ்துவுக்காய்

இழந்தவர் எவரும்

தரித்திரர் ஆனதில்லை

இராஜ்ய மேன்மைக்காய்

கஷ்டம் அடைந்தோர்

நஷ்டப்பட்டதிலை 


வருகையின் சத்தியம்

அகிலமும் முழங்க 

அலை அலையாய் வருவீர் 

ஆண்டவர் யேசுவின் 

சீக்கிர வருகையை 

ஆர்ப்பரிக்க வருவீர்