top of page

198. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே 

வருவீர் இயேசுவண்டை இளைப்பாற


தாகமுள்ளோரே வாருமென்றார்

தாகத்தோடு வரும் 

சமாரியாளைக் கண்டார்

தண்ணீர் கேட்டார் 

அவள் தாகம் தீர்த்தார்

பாவ மன்னிப்பைக் கொடுத்து 

மகிழ செய்தார்

- வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே 


பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ இருந்தாள்

கடும்நோய் நீங்கப் பலரிடம் சென்றாள்

நம்பிக்கை இழந்தாள்

நாதன் இயேசுவைக் கண்டாள்

நடுங்கி வஸ்திரம் 

தொட்டு சுகமடைந்தாள்

- வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே 


நாடு நகரங்கள் சுற்றி அலைந்தார் 

நானே வழி வேறில்லை 

என மொழிந்தார்

களைப்படைந்தார் 

அத்தி மரத்தை கண்டார்

கனியற்றிருப்பதைக் 

கண்டு சபித்தார்

- வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே 

bottom of page