top of page

199. வழி நடத்தும் வல்ல தேவன்

வழி நடத்தும் வல்ல தேவன்

வாழ்வில் நாயகனே 

வாழ்வில் நாயகனே - நம் 

தாழ்வில் நாயகனே


பரதேசப் பிரயாணிகளே 

நாம் வாழும் பாரினிலே 

பரமானந்தத்தோடே செல்வோம்

பரமன் நாட்டிற்கே - இயேசு 

பரன் தம் வீட்டினிற்கே


அந்தகார சக்திகள் 

எம்மை அணுகிடாமலே 

சொந்தமான தம் ஜனத்தை 

சூழ்ந்து காப்பாரே - இயேசு

துணையாய் நிற்பாரே


வாதை நோய்கள் வன்துன்பங்கள்

வருத்தியபோதும் 

பாதையில் நாம் சோர்ந்திடாமல் 

பலப்படுத்திடுவார் - இயேசு

திடப்படுத்திடுவார்

bottom of page