top of page

200. ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்

ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்

தீர்த்திடுவார் உந்தன் தாகமதை

பாவங்கள், ரோகங்கள், 

சாபங்கள் போக்கிட

புரிவாய்  அழைக்கிறார்


வல்லவரே இயேசு நல்லவரே

மிக அன்பு மிகுந்தவரே

இயேசு வல்லவரே அவர் நல்லவரே

உனக்காகவே ஜீவிக்கிறார்


யாரு மற்றவனாய்  நீ அலைந்தே

பாவ உளைதனிலே அமிழ்ந்தே

மாய்ந்திடாது உன்னை

தூக்கி எடுத்தவர்

மந்தையில் சேர்த்திடுவார்

- வல்லவரே இயேசு நல்லவரே


வியாதியினால் நொந்து வாடுவதேனோ?

நேயன் கிறிஸ்து சுமந்ததனை

சிலுவை மீதினில் தீர்த்ததாலே இனி

சுகமடைந்திடுவாய்

- வல்லவரே இயேசு நல்லவரே


பரனின் அன்பதை அகமதிலே

சொரிந்து தன் திரு ஆலயமாய்

மாற்றியே தம்மைப்போல்

தேவசாயலாக்கி

மகிமை சேர்த்திடுவார்

- வல்லவரே இயேசு நல்லவரே


வானமும் பூமியும் மாறிப்போயினும்

வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர்

காப்பார் வழுவாது

உள்ளங்கையில் வைத்தே

கலங்கிடாதே நீ வா

- வல்லவரே இயேசு நல்லவரே

bottom of page