202. இனிமை இனிமை இது இனிமை

இனிமை இனிமை இது இனிமை

மகிமை மகிமை புது மகிமை

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்து கொண்டிருந்தால்

இந்த நாள் முழுவதும் இல்லை தனிமை [2]


காலையும் மாலையும் புது கிருபை

கண்ணின் மணிபோல் காக்கும் கிருபை

வல்லமையுள்ள தேவனின் ஆவி 

வரம்தந்து காத்திட்ட தேவகிருபை [2]


மலைகள் விலகினாலும் மாறா கிருபை

மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை

பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரங்கள் சூழ்ந்தாலும்

பரிசுத்தவான்களைக் காக்கும் கிருபை [2]


அநாதி சினேகத்தால் வந்த கிருபை

ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை

அழகிய தேவகுமாரன் இயேசு

அளித்திட்ட அதிசயமான கிருபை [2]


வனாந்தர வழிதனில் வந்த கிருபை

வழிதப்பிப்போனோரைக் காக்கும் கிருபை

வல்லமையுள்ள தேவனின் ஆவி

வரம் தந்து காத்திட்ட  தேவகிருபை [2]