203. என் உள்ளம் கவர்ந்த இயேசு

என் உள்ளம் கவர்ந்த இயேசு ராஜா 

என் நாவில் துதிபெறும் ஜீவ நாதா 

வானரசே விண் தீபமே 

வாழ்த்துகிறேன் உம்மைப் பாடல்களால் 


பலகோடி உள்ளங்கள் உம்மை நினைக்க 

பலகோடி நாவுகள் உம்மைத் துதிக்க 

வானவர்கள் வாழ்த்திசைக்க 

வாழ்த்துகிறேன் உம்மை ஏழை நானும் 


சொந்தங்கள் பூலோகில் ஆயிரம் 

நிந்தையில் யார் தானோ தூணை வருவார் 

ஆதரவாய் நீர் இருக்க 

அஞ்சிடேன் மனம் கலங்கிடேன் 


பெண்ணோடும் பொருளெல்லாம் ஏன் உனக்கு 

புகழ் மேனி செல்வங்கள் நீரே எனக்கு 

உன்னதரே நின் பெலத்தால் 

உலகத்தை வென்று நான் ஜெயித்திடுவேன்