206. நான் காணாமல் போன ஆடல்லவோ

நான் காணாமல் போன ஆடல்லவோ 

கர்த்தர் என்னைத் தேடுகிறார்


ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை 

அன்பு மீறி நான் நடந்தேன் 

ஆதாம் ஈந்த காயீனைப்போல 

மனுக்கொலை நான் புரிந்தேன் 

ஆரம்ப முதலே ஆபத்தில் விழுந்தேன்  

அன்பர் என்னைத் வந்தார்

- நான் காணாமல் போன ஆடல்லவோ 


கைதூக்கி என்னைக் காப்பாற்றி எடுத்தார்  

காட்டித்தந்த யூதாஸ் நானே 

கல்வாரிச் சிலுவை அன்பருக்கு தந்த 

பெரும்பழி நான் சுமந்தேன் 

கல்லோடு முள்ளில் கால் பின்னிக் கிடந்தேன் 

கர்த்தர் என்னைத் தூக்கிவிட்டார்

- நான் காணாமல் போன ஆடல்லவோ