207. தேவ கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே

அவர் கிருபை என்றுமுள்ளதே

அவரைப் போற்றி துதித்துப்பாடி

அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்


நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்

கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே

அவர் நல்லவர்

அவர் வல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளது


சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்

பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு

முன்சென்றாரே அவர் நல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே


அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்

முட்செடி தன்னில் தோன்றிய தேவன்

பாதுகாத்தாரே அவர் நல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே


காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்

பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்

என்னை நடத்தினார் அவர் நல்லவர்

அவர் கிருபை என்று முள்ளதே