208. தினம் தினம் இயேசு நாயகனை

தினம் தினம் இயேசு நாயகனை

மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்

மகிழ்ந்து பாடுவேன்


ஆனந்தமாக என் நேசர் மார்பில்

அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்


கருவில் என்னைக் தெரிந்து கொண்டு

கருத்தாய் அவரைப் பாடவைத்தார்


வலையை அன்பாய்ச் சாத்தான் விரிக்க

வழியை மாற்றி அழைத்துச் சென்றார் 


மன்னவர் இயேசு என்னுள் இருக்க

மனிதன் எனக்கு என்ன செய்வான்?


அல்லல் நீங்கி மார்பினில் அணைத்தார் 

அல்லேலூயா பாடுகிறேன்.