209. இயேசுவைப் போல் அழகுள்ளோர்

இயேசுவைப் போல் அழகுள்ளோர் 

யாருமில்லை பூவினில் 

இதுவரை கண்டதில்லை 

காண்பதுமில்லை


பூரண அழகுள்ளவரே 

பூவில் எந்தன் வாழ்க்கையதில்

நீரே போதும் வேறே வேண்டாம் 

எந்தன் அன்பர் இயேசுவே

மண்ணுக்காக மாணிக்கத்தை 

விட்டிடமாட்டேன்


சம்பூரண அழகுள்ளோர் 

என்னை மீட்டுக் கொண்டீரே

சம்பூரணமாக என்னை 

உந்தனுக்கீந்தேன்


எருசலேம் குமாரிகள் 

என்னை முற்றும் வளைந்தே  

உம்மில் உள்ள எந்தன் 

அன்பை நீக்க முயன்றார்


கற்பனை மீறாதவர்க்குக் 

கானானை தருபவர் 

கனிவான கரம்கொண்டு 

நம்மை அணைப்பார்