top of page
210. அன்பின் தேவன் இயேசு
அன்பின் தேவன் இயேசு
உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்டபின்னும் தயக்கமேன் [அன்பின்]
மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும்
கர்த்தர் உண்டல்லோ
கவலையேன் கலக்கமேன் கர்த்தர்
இயேசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க இயேசு துடிக்கிறார் [அன்பின்]
வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே மன்னன் இயேசு பார் [கல்வாரியின்]
bottom of page