top of page

211. நெஞ்சினிலே விசாரம் பெருகையில்

நெஞ்சினிலே விசாரம் பெருகையில் 

ஆறுதல் தந்திடுவீர் - ஏசுவே 

அடைக்கலமாகிடுவீர் 

துக்கத்தினாலே கண்ணீர் பெருகையில் 

நம்பிக்கை தந்திடுமே 


பாலைவனமான் வாழ்க்கையில் நீர் 

சோலைவனம் வைத்தீர் - எனக்கு 

பாரபளுவையும் பலமாய் மாற்றி 

பாடங்கள் கற்றுத் தந்தீர் - தேவனே 

பாத்திரமாய் வடித்தீர் 


தேவனே நீர் வெளிச்சம் என்பதறிய 

இருளினில் வைத்திட்டாலும் - என்னை 

என் கண்ணீர் வாழ்வு வானவில் ஆனால் 

அதுவே பொதுமன்றோ - தேவனே 

ஆறுதல் நீரேயன்றோ

bottom of page