212. எலியாவின் தேவன் நம் தேவன்
எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் – 2
வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்
- கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்
- கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்
- கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்
- கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்