213. வானவ தேவா பெரியவர்

வானவ தேவா பெரியவர் 

கானங்கள் பாடி ஸ்தோத்தரிப்பேன் 

நாள்தோறும் துதி உமக்கே 

காரும் உன்றனின் அன்பிலேதான் 


தலைமுறை தலைமுறை சொல்லிடுவேன் 

வல்லமை செய்கை பேசிடுவேன் 

பூவுலகில் உம் அன்பைதானே 

மேவியாய் உயர்த்தி விவரிப்பேன் 


ஜீவன்கள் யாவும் உம் கரத்தை 

நாடியே நோக்கி இருக்கின்றன 

வாஞ்சைகள் யாவும் நிரப்பிடுவீர் 

ஆவலாய் வானமே புகழந்திடுமே 


நானிலமும் உம்மை போற்றிடுமே 

வானிலமும் உம்மை புகழந்திடுமே 

ஆவலாய் தேடுவோர் ஆனந்திப்பார் 

ஆர்பரிப்புடனே ஸ்தோத்தரிப்பேன்