top of page

215. வந்தாளும்‌ இயேசுவே வாருமிதில்

வந்தாளும்‌ இயேசுவே வாருமிதில்‌ - தேவ

மைந்தர்கள்‌ கூடுமிந்நேரமிதில்‌ - தேவ


பத்மு தீவில்‌ பரிசுத்த 

நாளில்‌ வந்த வண்ணமே

சத்துருக்கள்‌ கூட்டமெல்லாம்‌ 

சக்தியற்றுச்‌ சோரவே

இத்தினத்தில்‌ இங்கு வந்திடும்‌ [தேவா]‌


நல்வழியை நாடிடாமல்‌ ஓடும்‌ 

நரர்‌ யாவர்க்கும்‌

கல்வாரியின்‌ அன்பை இன்று 

கர்த்தனே நீர்‌ காட்டியே

நற்குணம்‌ அவர்க்கு நல்கிடும்‌ [தேவா]‌


சதாகாலங்களிலும்‌ 

இருப்பேன்‌ உங்கள்‌ கூடவே

சத்துருவின்‌ வல்லமைகள்‌ 

ஒன்றும்‌ மேற்கொள்ளாதென்றீர்‌

ஆதலால்‌ அநந்தம்‌ ஸ்தோத்திரம் [தேவா]‌

bottom of page