top of page

217. வானோடு உறவாடி

வானோடு உறவாடி 

கவிபாடும் பறவையினம் 

எனது இன்பம் பாருங்களேன் - நான் 

விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை 

களஞ்சியத்தில் சேர்ப்பதுமில்லை 


உலகெங்கும் ஓடோடி 

வாழ்வெல்லாம் போராடும் 

உங்களினம் பார்க்கின்றேன் - நானும் 

கவலையிலே இருந்ததில்லை 

கவலைகள் நீக்கும் வழி 

உங்களுக்கும் கூறுகின்றேன் 


என்ன செய்வோம் நாளை தினம் 

என்றெல்லாம் யோசிக்கும் 

உங்களையும் நேசிக்கவே - ஒரு 

பரம பிதா இருக்கிறதை 

யோசிக்க உங்களுக்கு 

கொஞ்சங் கூட நேரமில்லையே 

bottom of page