top of page
22. நானும் என் வீட்டாருமோவென்றால்
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - ஆ! நீயும் சேவிப்பாயா?
கர்த்தரையே சேவிப்பது
ஆகாததென்று கண்டால்,
"யாரை நீ சேவிப்பாய்"? என்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்!
- நானும் என் வீட்டாருமோவென்றால்
அடிமையான நம்மையும்
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கற்தரைச் சேவிப்பாயா?
- நானும் என் வீட்டாருமோவென்றால்
நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?
- நானும் என் வீட்டாருமோவென்றால்
நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?
- நானும் என் வீட்டாருமோவென்றால்
bottom of page