top of page

226. மோட்ச யாத்திரை செல்கின்றோம்

மோட்ச யாத்திரை செல்கின்றோம் 

மேலோகவாசிகள் - இம்

மாய லோகம் தாண்டியே 

எம் வீடு தோன்றுதே

கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே

காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம்


ஆனந்தமே ஆ ஆனந்தமே

ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்

ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்

ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம்


சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே

தம் நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே

தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்

நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே

- ஆனந்தமே ஆ ஆனந்தமே


அள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கின்றோம் 

நம் அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதே

கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே

கர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார்

- ஆனந்தமே ஆ ஆனந்தமே


கர்த்தர் எம் அடைக்கலம் கவலை இல்லையே

இக்கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே

கஷ்டம் நீக்குவார், கவலை போக்குவார்,

கைவிடாமல் நித்தமும் நடத்துவார்

- ஆனந்தமே ஆ ஆனந்தமே

bottom of page