top of page
229. சீர் பொறாமல் திக்கில்லாமல்
சீர் பொறாமல், திக்கில்லாமல்,
ஏசுவண்டை சேருவேன்
ஆவலோடும் ஆசையோடும்
திருப்பாதம் அண்டுவேன்
அண்டினேனே, அண்டினேனே,
ஆசீர்வாதம் தாருமே;
அண்டினேனே, அண்டினேனே, ஆற்றித்
தேற்றிக் காருமே
தாவாக, நேசமாக
சீரைத் தந்து ரட்சிப்பீர்
பாவத் தீங்கும் தூர நீங்கும்
சர்வ சுத்தி யாககுவீர்
குணம் மாற, நெஞ்சம் ஆறப்
பரவச மாகுவேன்
வரும் லோக வாழ்வைச் சேர
ஊழி காலம் வாழுவேன்
அருள் தாரும், பாது காரும்
மறு மாசில்லாமலே;
வாழ்விலேயும் தாழ்விலேயும்
தாங்கி வாரும் நாயனே
bottom of page